ஒருவேளை இந்தக் கப்பல் இந்தியா வந்திருந்தால், 2019-க்குப் பிறகு (சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்) ஈரானிலிருந்து இந்தியா வாங்கும் முதல் கச்சா எண்ணெய் இறக்குமதியாக இது இருந்திருக்கும். ஒரு காலத்தில் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ஈரானிய கச்சா எண்ணெய் 11.5 சதவீதமாக இருந்தது. 2018-ல் அந்நாடு ஒருநாளைக்கு 5,18,000 பீப்பாய்களை இறக்குமதி செய்தது. ஆனால் அமெரிக்காவின் தடைக்குப் பிறகு, இது வெகுவாகக் குறைந்து, ஒருகட்டத்தில் இறக்குமதியே நிறுத்தப்பட்டது. கடுமையான அமெரிக்கத் தடைகள் அமலுக்கு வந்ததையடுத்து, 2019-இல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ஈரானிய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை என சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் இறுதி நேரத்தில் இந்த இறக்குமதி கப்பல் சீனாவை நோக்கி திரும்பியுள்ளது.


