Last Updated:
ஜெய்சங்கர் மாஸ்கோவில் புதினை சந்தித்து, இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு, இரு நாடுகளின் உறவு, பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசினார்.
ரஷ்ய அதிபர் புதினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சத்தித்து பேசினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு ஜெய்சங்கர் சென்றுள்ளார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது, இந்திய -ரஷ்ய அதிகாரிகள் உடன் இருந்தனர். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவில் விரைவில் இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு நடைபெற உள்ளது என்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து புதினிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரு நாடுகளின் உறவை மேலும் மேம்படுத்துவதில் புதினின் கண்ணோட்டங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் தாம் மதிப்பளிப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விவாதித்தாகவும் கூறியுள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் 23 ஆவது இந்திய – ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு புதின் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த 21 ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, செவ்வாயன்று பிரதமர் மோடி- ரஷ்ய கடல் சார் வாரியத்தின் தலைவர் நிகோலாய் சந்திப்பின் போது, இந்திய-ரஷ்ய இடையிலான கடல்சார் திறன்களை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
November 19, 2025 3:13 PM IST


