Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி-7 நாடுகளுடன் ரஷ்யா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா மீது அதிக வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தியா மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று ஜி-7 நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-7 அமைப்பின் நிதியமைச்சர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், ரஷ்யாவிற்கு எரிபொருள் வருவாயை குறைப்பதன் மூலம் மட்டுமே உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றார். எனவே, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் நாடுகள் மீது ஜி-7 நாடுகளும் அமெரிக்காவை போன்று அதிக வரி விதிக்க வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக் கொண்டார். மேலும், ரஷ்யா மீது புதிதாக பொருளாதாரத் தடைகளை விதிப்பது, தங்களது நாடுகளில் உள்ள ரஷ்யாவின் சொத்துகளை முடுக்குவது உள்ளிட்டவை குறித்தும் ஜி-7 நாடுகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தது சாதாரண விஷயம் அல்ல என்று கூறினார். இதனால், இந்தியாவுடனான விரிசல் அதிகரித்துவிட்டதாகவும் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.
September 13, 2025 2:43 PM IST
“இந்தியா மீது அதிக வரி விதிக்க வேண்டும்..” ஜி-7 நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!


