• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியா மற்றும் தெற்காசியாவில் சிறந்த விமான நிறுவனமாக உருவெடுத்த Vistara!

GenevaTimes by GenevaTimes
August 10, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியா மற்றும் தெற்காசியாவில் சிறந்த விமான நிறுவனமாக உருவெடுத்த Vistara!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்வதேச அளவில் விமானத் துறையின் நிகர லாபம் $30.5 பில்லியனை அடையும் என்றும், இந்த 2024-ஆம் ஆண்டில் மொத்த வருவாய் $1 டிரில்லியனை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) கூறி இருக்கிறது.

விமான பயணிகளுக்கு அவர்களின் வான்வழி பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுவதில் உலகளாவிய விமான நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர் சேவை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் மற்றும் புதுமை, வளர்ச்சியிலும் விமான நிறுவனங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.

விளம்பரம்

எனினும் ஒரு விமான நிறுவனத்தின் வெற்றி என்பது அதன் பயணிகளுக்கு அந்நிறுவனம் அளிக்கும் திருப்தி, செயல்திறன், நேரம் தவறாமை, விமானத்தில் உள்ள வசதிகள் மற்றும் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு உள்ளிட்டவற்றை சார்ந்து உள்ளது. இதனிடையே 2024ஆம் ஆண்டில் உலகளாவிய விமான நிறுவனங்களில் டாப் 10 சிறந்த நிறுவனங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸை பின்னுக்கு தள்ளி, 2024ஆம் ஆண்டில் உலகின் சிறந்த விமானச் சேவை வழங்கும் நிறுவனம் என்ற பட்டத்தை கத்தார் ஏர்வேஸ் தட்டி சென்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரண்டாம் இடத்தையும், எமிரேட்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

விளம்பரம்

கேத்தே பசிபிக் ஏர்வேஸ் நிறுவனம் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் 8-ஆம் இடத்தில் இருந்த நிறுவனம், இந்த ஆண்டு பட்டியலில் 5-ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே நேரம் கடந்த ஆண்டு பட்டியலில் 12-ஆம் இடத்தில் இருந்த சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 2024-ஆம் ஆண்டில் 10-வது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் நம்முடைய நாட்டை சேர்ந்த விமான நிறுவனமான விஸ்தாரா, உலகளவில் 16-வது இடத்தில் உள்ளது. அதே நேரம் 2024-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் தெற்காசியாவிலேயே சிறந்த விமான நிறுவனமாக விஸ்தாரா உருவெடுத்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் டாப் 10 சிறந்த உலகளாவிய விமான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 7 நிறுவனங்கள் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவையாக உள்ளன. டாப் 10 பட்டியலில் ஐரோப்பிய விமான நிறுவனங்கள் மூன்று மட்டுமே இடம்பெற்றுள்ளன.

விளம்பரம்

பல்வேறு கேட்டகிரிகளில் மில்லியன் கணக்கான பயணிகளின் ரிவ்யூக்களின் அடிப்படையில் Skytrax World Airline Awards விமான நிறுவனங்களை வரிசைப்படுத்தியது. 2024ஆம் ஆண்டில் உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் டாப் 10 பட்டியல் கீழே…

– கத்தார் ஏர்வேஸ்

– சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

– எமிரேட்ஸ்

– ஏஎன்ஏ ஆல் நிப்பான் ஏர்வேஸ்

– கேத்தே பசிபிக் ஏர்வேஸ்

– ஜப்பான் ஏர்லைன்ஸ்

– துர்கிஷ் ஏர்லைன்ஸ்

– ஈவிஏ ஏர்

– ஏர் பிரான்ஸ்

– சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ்

2014ஆம் ஆண்டில் 7.9 மில்லியனாக இருந்த இந்தியாவின் திறன் 2024 ஏப்ரலில் 15.5 மில்லியனாக இரட்டிப்பாகி இருக்கும் நிலையில், உலகளவில் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையாக இந்தியா மாறியுள்ளது. அதே நேரம் 2024-ஆம் ஆண்டிற்கான தெற்காசியாவின் சிறந்த விமான நிறுவனங்களின் சமீபத்திய ஸ்கைட்ராக்ஸ் தரவரிசையில், முதல் பத்து விமான நிறுவனங்களில் ஆறு இந்திய நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிராந்திய தரவரிசையில் முன்னணியில் உள்ள விஸ்தாரா உலகளவில் 16-வது இடத்தையும், இண்டிகோ 52-வது இடத்தையும், ஏர் இந்தியா 90-வது இடத்தையும் பிடித்துள்ளன.

விளம்பரம்

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

2024ஆம் ஆண்டில் தெற்காசியாவின் சிறந்த டாப் 10 விமான நிறுவனங்கள் கீழே…

– விஸ்தாரா

– இண்டிகோ

– ஏர் இந்தியா

– ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்

– ஆகாசா ஏர்

– ஸ்பைஸ் ஜெட்

– மால்டீவியன்

– பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்

– ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

– ஏர் ப்ளூ

.

Read More

Previous Post

2-வது முறையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ள சிஸ்கோ நிறுவனம் | Cisco to lay off employees for second time

Next Post

EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் 7 வகையான மாதாந்திர ஓய்வூதியங்கள்!

Next Post
EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் 7 வகையான மாதாந்திர ஓய்வூதியங்கள்!

EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் 7 வகையான மாதாந்திர ஓய்வூதியங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin