Last Updated:
ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக, இந்தியா-மத்திய கிழக்கு இடையே 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா – மத்திய கிழக்கு நாடுகள் இடையே 444 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அறிவித்தது.
ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் வான் எல்லை மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியா- மத்திய கிழக்கு நாடுகள் இடையே 444 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அறிவித்தது. குறிப்பாக, சென்னையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டிய மற்றும் வர வேண்டிய 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி வரை துபாய், பஹ்ரைன், தோஹா, சார்ஜா, அபுதாபியில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 16 விமானங்களும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 17 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
இதனைத்தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள், விமான நிலைய வளாகத்தில் தங்கி ஓய்வெடுத்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான 33 புறப்பாடு மற்றும் வருகை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை (திங்கட்கிழமை) துபாய்க்கான விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அபுதாபியில் விமான சேவை பாதிப்பால் சிக்கி உள்ள சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் காலத்தை நீட்டிக்குமாறு அனைத்து ஹோட்டல்களுக்கும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான செலவை அரசே ஏற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா – மத்திய கிழக்கு நாடுகள் இடையே 444 விமான சேவைகள் ரத்து.. விமான போக்குவரத்துத் துறை அறிவிப்பு


