Last Updated:
இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. அமைதியை தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதன்பிறகு, இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. அவற்றை தடுத்து நிறுத்தி இந்திய படைகள் தாக்கி அழித்தன. இதைத் தொடர்ந்து, சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில், இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இதில் அமைதியை தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நமது அனைத்து விமானிகளும் நாடு திரும்பி விட்டதாக ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி கூறினார். சண்டை நிறுத்தம் அமலில் இருந்தாலும், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பார்மர் உள்ளிட்ட சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு, எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை.. அமைதி குறித்து முக்கிய ஆலோசனை!


