உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி அணிகளுக்கு இடையே இன்று போட்டி நடைபெறும்ள நிலையில் மழை அவ்வப்போது குறிக்கிட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை இரு அணிகளும் 7 முறை டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளன. இவற்றில் 6 முறை இந்திய அணியும் ஒரு முறை பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நியூயார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
முன்னதாக மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போட்ட பின்னரும் மழை அவ்வப்போது குறுக்கீடு செய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மேட்சை அதிகம் எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மழை குறைந்ததை தொடர்ந்து இரவு 8.50 மணிக்கு ஆட்டம் ஆரம்பித்தது. இதன்பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விரா ட் கோலி களம் இறங்கினர். முதல் ஒவரை ஷாகின் அப்ரிதி வீச, அதில் 3 ஆவது பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ரோஹித் சர்மா.
முதல் ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டியை நடுவர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
இதையும் படிங்க – India vs Pakistan Live Streaming : இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி நேரலை
இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வென்றது. அதே நேரம் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் அமெரிக்க அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது கவனிக்கத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
