Last Updated:
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், வர்த்தக வார இறுதி நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 880 புள்ளிகள் சரிந்து, 79 ஆயிரத்து 454 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 265 புள்ளிகள் சரிந்து, 24 ஆயிரத்து 8 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. வங்கி, வாகனங்கள், மருந்துப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவடைந்ததால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர்.
அதேநேரம், ஊடகத் துறைக்கான குறியீடு ஒரு சதவீதம் அளவில் ஏற்றம் கண்டது. நிஃப்டி 50 குறியீட்டில் ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், HDFC வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஒரு சதவீதம் அளவிற்கு மேல் சரிந்தன
மேலும் டைட்டன், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
Mumbai,Maharashtra


