Last Updated:
இந்தியா – பாகிஸ்தான் போர் ஏற்பட்டால், சீனாவின் 68 பில்லியன் டாலர் முதலீடு பாதிக்கப்படும். பெல்ட் அண்ட் ரோடு திட்டம் மற்றும் பொருளாதார வழித்தடம் கடுமையாக பாதிக்கப்படும்.
சீனா, பாகிஸ்தான் இடையிலான நட்பு 1951-லிருந்தே சுமுகமாக உள்ளது. அதிலும் பொருளாதார மேம்பாட்டுக்காக மட்டுமே சீனா சிறந்த நண்பனைப் போலப் பாகிஸ்தானை ஆதரிக்கிறது. 2005 முதல் 2025 வரை பல்வேறு காலகட்டங்களில் பாகிஸ்தானில் சுமார் 68 பில்லியன் அமெரிக்க டாலர்களை, சீனா முதலீடு செய்துள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு கைக்கொடுக்கும் விதமாக 2024 சீனா, சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மின்னணு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்தது. இவற்றில், 35 சதவிகிதம் செமிகண்டக்டர் சாதனங்கள் மற்றும் 27 சதவிகிதம் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
மேலும், 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அணு உலைகள், பாய்லர்கள், மெகா மெசின்கள் மற்றும் மெசின்களுக்கான உதிரி பாகங்களையும் ஏற்றுமதி செய்தது. அதுமட்டுமல்ல, 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரும்பு மற்றும் எஃகு பொருட்களும் ஏற்றுமதி செய்துள்ளது.
தற்போது இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் சீனாவின் அத்தனை முதலீடும் வீணடிக்கப்படும். அதிலும் மிக முக்கியமாக – பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை அமைக்கவும் சீனா போட்ட முதலீடு கடுமையாகப் பாதிக்கப்படும்.
இந்தியாவின் தாக்குதல் விஸ்வரூபம் எடுத்தால் மத்திய ஆசியாவைச் சாலை வழியாக இணைக்கும் சீனாவின் அக்கனாத் திட்டம் அதன் மூலம் கலைந்து விடும் என்ற அச்சம் சீனாவிற்கு அதிகரித்துள்ளது. இப்படியொரு நிலைமை வரக்கூடாது என நினைத்தே சீனா சமாதான வார்த்தைகளைக் கூறி வருவதாகத் தெரிகிறது.


