இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்திவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்தப்பட்டது. நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடுகளையும் ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியதையடுத்து, மே 10-ஆம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலானது.

