• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்? ஆம் என்றால், போரை யார் முதலில் அறிவிப்பார்கள்…?

GenevaTimes by GenevaTimes
May 9, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்? ஆம் என்றால், போரை யார் முதலில் அறிவிப்பார்கள்…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாதுகாப்பு கருதி இந்தியாவில் உள்ள ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற பல்வேறு நகரங்களும் டவுன்களிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற தாக்குதலின் கீழ் 9 பாகிஸ்தான் தீவிரவாத மையங்கள் தாக்கப்பட்டன. இதனால் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை தாக்கலாம் என்பதால் தொடர்ந்து பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. ஆம் எனும் பட்சத்தில் இந்தியா ஒரு போரை எவ்வாறு முறையாக அறிவிக்கும்.

இதனை நியூஸ்18 உங்களுக்காக விவரிக்கிறது: போர் அறிவிப்பு தொடர்பான விஷயங்களை இந்தியா அரசியலமைப்பு விதிகள், பாராளுமன்றத்தின் கண்ணோட்டம் மற்றும் நிர்வாகம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு கையாளுகிறது. இந்தியாவை பொருத்தவரை ஒரு போரை அறிவிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் அமைந்திருக்கிறது. எனினும் இந்த அறிவிப்பானது பிரதமர் தலைமையில் இயங்கும் மத்திய அமைச்சர்களின் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. பிற நாடுகளைப் போல ஒரு போரை அறிவிப்பதற்கான விவரமான ஒரு செயல்முறை இந்திய அரசியல் அமைப்பில் கிடையாது. எனினும் இந்திய அரசியலமைப்பில் உள்ள 352 வது பிரிவின் கீழ் தேசிய அவசரநிலை என்பது போர் போன்ற சூழ்நிலையுடன் தொடர்புடையதாக அமைகிறது.

இதில் ஈடுபட்டுள்ளவர்கள் யாவர்?

இந்தியாவின் குடியரசு தலைவர்: ஆயுத படைகளின் மூத்த தளபதியான இந்திய ஜனாதிபதியே ஒரு போரை அறிவிக்க வேண்டுமா அல்லது சமாதானமாக செல்ல வேண்டுமா என்பதை அறிவிப்பார். ஆனால் இந்த அதிகாரம் அரசின் ஆலோசனையில் அடிப்படையில் அமல்படுத்தப்படும். ஆகவே ஜனாதிபதி ஒரு போரை அறிவிப்பது அல்லது சமாதானமாக செல்வது என்பது முழுக்க முழுக்க அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் செய்யப்படுகிறது.

அமைச்சரவை: போருக்கு தயாராக வேண்டுமா அல்லது சமாதானத்தை அறிவிக்கலாமா என்பது இந்திய பிரதமரின் கீழ் இயங்கும் அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்களின் முடிவை பொருத்த அமையும். எந்த ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பும் அமைச்சரவையானது ராணுவ தளபதிகள், புலனாய்வு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியோரின் கருத்துக்களை சேகரிக்கும். ஒரு போரை அறிவிப்பதற்கு இந்திய ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்ய அமைச்சரவை குழுவின் தலைவரான பிரதமர் பொறுப்பேற்பார்.

பாராளுமன்றம்: இந்திய அரசியலமைப்பு படி, பாராளுமன்றத்தால் ஒரு போரை அறிவிக்கவும் அல்லது முன்னதாக அங்கீகரிக்கவோ முடியாது என்றாலும் கூட பாராளுமன்றம் அந்த முடிவை மேற்பார்வையிட்டு, அதற்கான செலவுகளை நிர்வகிக்கிறது. அமைச்சரவை வழங்கிய ஆலோசனையின் பெயரில் ஆரம்பகால போர் அறிவிப்பை பிரதமர் செய்த பிறகு உடனடியாக அது மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு அறிவிக்கப்பட்டு அவர்களுடைய அங்கீகாரத்தை பெற வேண்டும்.

எழுத்துப்பூர்வமான செயல்முறை: இதில் அடங்கியுள்ள செயல்முறை பற்றி பேசும்போது ஒரு போரை முறையாக அறிவிப்பதற்கு சூழ்நிலையை மதிப்பீடு செய்த பிறகு மத்திய அமைச்சரவை இந்திய ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமான பரிந்துரையை வழங்க வேண்டும். அந்த எழுத்துப்பூர்வமான பரிந்துரையை மத்திய அமைச்சரவையிடமிருந்து பெற்ற இந்திய ஜனாதிபதி 352 பிரிவின் கீழ் தேசிய அவசரநிலையை அறிவிக்கலாம். இந்த அறிவிப்பு என்பது நாடு முழுவதும் அல்ல அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கு மட்டுமே செய்யலாம்.

இந்த அறிவிப்பானது இரு அவைகள் முன்பும் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு அவையிலும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறும் பட்சத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு இந்த செயல்முறை நிறுத்தப்படும். பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட உடன் இந்த அவசர நிலையானது 6 மாதங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். மேலும் 6 மாதங்களுக்கு தேவைப்பட்டால் இதனை நீட்டிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்படும்.

1965, 1971 மற்றும் கார்கில் போர்களில் நடந்தது என்ன?

இந்தியா – பாகிஸ்தான் போர், 1947 – 48 (முதல் காஷ்மீர் போர்):

பழங்குடி வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் படைகளுடன் காஷ்மீர் முற்றுகையுடன் இந்த போர் துவங்கியது. காஷ்மீரின் மகாராஜா இந்தியாவுடன் இணைந்த பிறகு இந்தியா இதற்கு பதில் அளித்தது. இதற்கு இரண்டு தரப்பிலும் முறையாக போர் அறிவிப்பு என்பது செய்யப்படவில்லை.

இந்தியா – சீனா போர், 1962

பதற்றம் நிறைந்த எல்லை பகுதியில் சீனாவின் மிகப்பெரிய தாக்குதலுடன் இந்த போர் ஆரம்பித்தது. இந்த போர் இந்தியாவிற்கு ஒரு ஆச்சரியமாக இருந்தது. இதில் இந்தியா மற்றும் சீனா முறையாக போரை அறிவிக்கவில்லை. சீனா ஒருதலைபட்சமாக போரை நிறுத்தி, ஒரு மாதத்திற்கு பிறகு பின்வாங்கியது.

இந்தியா – பாகிஸ்தான் போர், 1965: எல்லை மோதல்கள் காரணமாக இந்த போர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தீவிரமடைந்தது. சர்வதேச எல்லையை கடந்து இந்தியா இதற்கு பதில் அளித்தது. இந்த போரிலும் இரண்டு தரப்பிலும் எந்த ஒரு அறிவிப்பும் செய்யப்படவில்லை.

இந்தியா – பாகிஸ்தான் போர், 1971

(வங்காளதேச விடுதலைப் போர்): கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் விளைவாக இந்த போர் தீவிரமடைந்தது. இந்த போர் குறித்த அறிவிப்பு முன்னதாக செய்யப்படவில்லை. இந்தியா மீது பாகிஸ்தான் விமான தாக்குதல்களில் ஈடுபட்டது. இதனால் இந்தியா முழுவீச்சுடன் போருக்கு தயாரானது.

கார்கில் போர், 1999:

பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இந்திய எல்லையின் கார்கில் பகுதிக்குள் நுழைந்ததன் விளைவாக இந்த போர் துவங்கியது. ‘ஆபரேஷன் விஜய்’ என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதலுக்கு இரு தரப்பினரிடமிருந்தும் எந்த ஒரு முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை.

First Published :

May 09, 2025 11:24 AM IST

Read More

Previous Post

கடும் பதற்றம்…! அடித்து நொறுக்கும் இந்தியா – சர்வதேசத்திடம் சரணடையும் பாகிஸ்தான்

Next Post

India – Pakistan Conflict: “எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" – அமெரிக்க துணை அதிபர் பேட்டி

Next Post
India – Pakistan Conflict: “எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" – அமெரிக்க துணை அதிபர் பேட்டி

India - Pakistan Conflict: ``எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" - அமெரிக்க துணை அதிபர் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin