கோலாலம்பூர்:
இந்தியா, பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக, அங்குள்ள மலேசியத் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு முழுமையான தகவல்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை தாண்டிய தாக்குதலால் மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆபத்தான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.
அங்குள்ள மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள் காஷ்மீர் போன்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று சனிக்கிழமை சிரம்பானில் தேசிய பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர்ப் பதற்றங்கள் தொடர்பான அண்மைய நிலவரங்களை வெளியுறவு அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அமைச்சர் தோக் மாட தெரிவித்தார்.


