Last Updated:
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இரண்டு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான வர்த்தகம் அடுத்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – நியூசிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நியூசிலாந்துடனும் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள இந்தியா முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, இந்தியாவில் இருந்து நியூசிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 100 சதவிகித வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நியூசிலாந்தின் 95 சதவிகித ஏற்றுமதி பொருட்களுக்கு இந்தியா வரிச் சலுகை வழங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிள், கிவி பழங்கள், தேன் மற்றும் மரக்கட்டைகள் குறைந்த விலையில் இந்தியாவுக்கு வரும். எனினும், பால் பண்ணைத் துறையைப் பாதுகாக்க, பால், தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களுக்கு இந்தியா வரி விலக்கு அளிக்கவில்லை.


