• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாக். விமான படையின் 20% உள்கட்டமைப்புகள் நாசம் | 20% of Pakistan Air Force infrastructure destroyed in Operation Sindoor attack

GenevaTimes by GenevaTimes
May 15, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாக். விமான படையின் 20% உள்கட்டமைப்புகள் நாசம் | 20% of Pakistan Air Force infrastructure destroyed in Operation Sindoor attack
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ​பாகிஸ்​தான் மீது நடத்​திய ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் அந்​நாட்டு விமானப் படை​யின் 20 சதவீத உள்​கட்​டமைப்​பு​கள், போர் விமானங்​கள் நாசமடைந்​துள்​ளன. அத்​துடன் பாகிஸ்​தான் ராணுவ அதி​காரி​கள் உட்பட 50 பேர் உயி​ரிழந்​தது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். அதற்கு பதிலடி கொடுக்க இந்​தியா ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் கடந்த 10-ம் தேதி இந்​தியா நடத்​திய தாக்​குதலில் பாகிஸ்​தான் விமானப் படை, ராணுவத்​துக்கு பேரிழப்பு ஏற்​பட்​டுள்​ளது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

எல்​லைக் கட்​டுப்​பாட்டு கோட்​டருகே இந்​தியா நடத்​திய தாக்​குதலில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களின் பல்​வேறு பதுங்கு குழிகள், சுரங்​கங்​கள் அழிக்​கப்​பட்​டுள்​ளன. அத்​துடன் பாகிஸ்​தான் ராணுவத்​தின் பல தளங்​களை இந்​தியா தாக்​குதல் நடத்தி அழித்​துள்​ளது. சுமார் 12-க்​கும் மேற்​பட்ட பாகிஸ்​தான் ராணுவ தளங்​கள் மீது இந்​தியா தாக்​குதல் நடத்தி உள்​ளது.

இதுகுறித்து பாது​காப்​புத் துறை வட்​டாரங்​கள் நேற்​று​முன்​தினம் கூறிய​தாவது: இந்​திய ராணுவ தளங்​கள், பொது​மக்​கள் வாழும் இடங்​களை குறி வைத்து பாகிஸ்​தான் தாக்​குதல் நடத்​தி​யது. அவற்றை இந்​திய ஏவு​கணை​களும், ட்ரோன்​களும் முறியடித்​தன. அதற்கு பதிலடி​யாக​பாகிஸ்​தானின் சர்​கோதா மற்​றும் போலாரி விமானப் படை தளங்​களில் இந்​தியா கடும் தாக்​குதல் நடத்​தி​யது. அங்​குள்ள வெடிபொருள் கிடங்கு மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

அந்த பகு​தி​களில்​தான் பாகிஸ்​தானின் எப்​-16, ஜே-17 போன்ற போர் விமானங்​கள் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​தன. இந்த தாக்​குதலில் பாகிஸ்​தான் விமானப் படை அதி​காரி உஸ்​மான் யூசுப் மற்​றும் விமானப் படை​யின் 4 வீரர்​கள் உட்பட 50 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். அத்​துடன் பல போர் விமானங்​கள் நொறுங்கி உள்​ளன.

நூர் கான், ரபிகியூ, முரித், சுக்​குர், சியால்​கோட், பஸ்​ருர், சுனியன், சர்​கோ​தா, ஸ்கர்​தூ, பலோரி, ஜகோ​பா​பாத் போன்ற பாகிஸ்​தானின் ராணுவ தளங்​கள் சேதம் அடைந்​தன. இந்​தி​யா​வின் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்கு முன்​பும், தாக்​குதலுக்​குப் பின்​பும் எடுக்​கப்​பட்ட சேட்​டிலைட் படங்​கள் அதை உறு​திப்​படுத்தி உள்​ளன.

வீடியோக்கள் வெளியீடு: முன்​ன​தாக இந்​திய தாக்​குதலில் நொறுங்கி போன பாகிஸ்​தானின் விமானப் படை தளங்​கள் தொடர்​பான வீடியோவை கடந்த திங்​கட்​கிழமை இந்​திய வி​மானப் படை வெளி​யிட்​டது. அதே​போல் பாகிஸ்​தான் ஏவிய ட்ரோன்​கள்​, ஏவு​கணை​களை நடு​வானிலேயே சுட்​டு வீழ்த்​தி​ய வீடியோவும்​ வெளியிடப்​பட்​டது.



Read More

Previous Post

“டிரான்,தேசபந்துவுக்கு 30 கோடி ரூபாய் கொடுக்க மறுத்தேன்” ; ஹரக் கட்டா

Next Post

Virat Kohli | “அவருக்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை…” – விராட் கோலிக்கு குரல் கொடுத்த முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்

Next Post
Virat Kohli | “அவருக்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை…” – விராட் கோலிக்கு குரல் கொடுத்த முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்

Virat Kohli | “அவருக்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை...” - விராட் கோலிக்கு குரல் கொடுத்த முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin