Last Updated:
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இன்றைய டி-20 போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரைக் கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
4ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் லக்னோவில் இன்று மல்லுக்கட்டுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகரில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த 3ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. உடல்நலக் குறைபாடு காரணமாக, கடைசி 2 போட்டிகளில் அக்சர் படேல் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
December 17, 2025 12:23 PM IST


