Last Updated:
தர்மசாலாவில் நடைபெறும் 3வது டி20 போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது.
இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.
இந்திய அணியைப் பொறுத்தவரையில், சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் ஆகியோர் தொடர்ந்து மோசமாகவே விளையாடி வருகின்றனர். இருவரும் தங்கள் திறமையை மீண்டும் நிரூபித்து விமர்சனத்துக்கு விடைகொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். பந்துவீச்சும் பெரியளவு சோபிக்காத நிலையில், அதிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தர்மசாலா மைதானத்தில் இதுவரை மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற இருக்கும் ஆட்டம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
December 14, 2025 6:58 AM IST


