அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளும் கட்டாயம் டாப் இடங்களைப் பிடித்துவிடும். ஆக, இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், கட்டாயம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று நாடுகளுக்கும் 500 சதவிகித வரி விதிக்கப்படும்.
இந்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சி, குடியுரசுக் கட்சி இரண்டு கட்சிகளுமே பெருமளவு வாக்களிக்கும் என்று லிண்ட்சே எதிர்பார்க்கிறார். இந்த மசோதாவிற்கு ட்ரம்பின் ஆதரவும் உள்ளது என்று நேற்றைய ட்ரம்ப் உடனான சந்திப்பிற்குப் பிறகு லிண்ட்சே தெரிவித்துள்ளார்.

இந்தியாவை இந்த வரி என்ன செய்யும் என்கிற கேள்விக்கு, “அமெரிக்கா இந்திய பொருள்களின் மீது எவ்வளவு வரியை ஏற்றினாலும் இனி இந்திய ஏற்றுமதியாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில், இப்போதே அவர்கள் மிக அதிக வரியைத் தான் சந்தித்து வருகிறார்கள்.
இதனால், தங்களது ஏற்றுமதிகளை வேறு நாட்டின் பக்கம் திருப்பத் தொடங்கிவிட்டனர் இந்திய ஏற்றுமதியாளர்கள்” என்று பதில் கூறுகின்றனர்.
இன்னொரு பக்கம், இந்தியா, சீனப் பொருள்களின் விலை ஏற்றுவது அமெரிக்காவிற்கும் நஷ்டம் என்று அரசியல் பார்வையாளர்கள் என்று கூறுகின்றனர்.
வட கரோலினா, வட டெக்ஸான் போன்ற அமெரிக்க மாகாணங்களில் இந்திய பொருள்களின் நுகர்வோர்கள் மிக அதிகம். இப்போது இந்திய பொருள்களின் மீதுள்ள 50 சதவிகித வரியே, அவர்களுக்கு விலைவாசியைக் கூட்டியுள்ளது.
500 சதவிகிதம் என்று சொன்னால், நிலைமையைக் கேட்கவே வேண்டாம்.

