காங்டாக்: இந்தியா, சீனா எல்லையை ஒட்டி அமைந்துள்ள நாதுலா கணவாய், குபுப், சோம்கோ ஏரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப் பொழிவு பதிவாகி உள்ளது. இதனால் சிக்கிம் மாநிலத்தில் வெப்பநிலை குறைந்துள்ளது.
உயரமான சில மலைப் பகுதியில் வெப்பநிலை ஜீரோ டிகிரிக்கும் கீழே சென்றுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகவும் மோசமான வானிலை தொடரும். இதையடுத்து சிக்கிம் மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

