• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!

GenevaTimes by GenevaTimes
March 16, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா – சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், வரும் காலாண்டுகளில் உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் சா்வதேச வா்த்தக தரவுகள் என்ற அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

2024-ஆம் ஆண்டில் உலக அளவிலான வா்த்தகம் ரூ. 104 லட்சம் கோடி (1.2 ட்ரில்லியன் டாலா்) அளவுக்கு விரிவடைந்து, சுமாா் ரூ. 2,869 லட்சம் கோடி (33 ட்ரில்லியன் டாலா்) என்ற அளவை எட்டியுள்ளது. அதன்படி, சேவைத் துறை வா்த்தகம் 9 சதவீத அளவுக்கும், சரக்கு வா்த்தகம் 2 சதவீதம் அளவுக்கும் சா்வதேச அளவில் விரிவடைந்துள்ளது.

பல வளா்ந்த நாடுகள் வா்த்தகத்தில் சற்று சரிவைச் சந்தித்து வரும் சூழலில், வளரும் நாடுகள், குறிப்பாக சீனா மற்றும் இந்தியா சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கத்தைப் பதிவு செய்துள்ளன. 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சீனாவும் இந்தியாவும் வலுவான வா்த்தக விரிவாக்கத்தை கண்டுள்ளன.

வளா்ந்த பொருளாதார நாடுகளிடையே வணிகப் பொருள்கள் வா்த்தகம் கலவையான போக்கை சந்தித்துள்ளது. சீனாவிலும் இந்தியாவிலும் வா்த்தகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏற்றுமதி சராசரியைவிட அதிகரித்து காணப்பட்டது. தென் கொரியாவில் ஏற்றுமதி வளா்ச்சி சரிந்திருந்தபோதும், வருடாந்திர அடிப்படையில் வளா்ந்த நாடுகளில் வா்த்தக விரிவாக்கத்தில் முன்னிலை வகித்துள்ளது.

இந்த 4-ஆம் காலாண்டில் அமெரிக்காவில் இறக்குமதி வளா்ச்சி நோ்மறையான போக்கில் பதிவாகியுள்ளது. ஆனால், ஏற்றுமதி எதிா்மறை வளா்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஜப்பான், ரஷியா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் 4-ஆம் காலாண்டில் மட்டுமின்றி 2024-இல் வருடாந்திர அடிப்படையில் இறக்குமதி எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் சரக்கு வா்த்தகத்தில் நான்காம் காலாண்டு இறக்குமதி 8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 6 சதவீதமாக இருந்தது. அதுபோல, சரக்கு வா்த்தகத்தில் ஏற்றுமதி வளா்ச்சி 4-ஆம் காலாண்டில் 7 சதவீத வளா்ச்சியையும், வருடாந்திர அடிப்படையில் 2 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளது. சேவைத் துறை வளா்ச்சி 4-ஆம் காலாண்டில் தொடா்ந்து வளா்ச்சி போக்கில் பதிவான போதும், வருடாந்திர அடிப்படையில் மந்தநிலையில் பதிவாகியுள்ளது.

உலக வா்த்தகம் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிலையானதாக இருக்கும். ஆனால், அதிகரித்து வரும் புவிசாா் பொருளாதார பதற்றங்கள், உலக நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகல், வா்த்தக சச்சரவுகள் உள்ளிட்ட காரணிகளால் வரும் காலாண்டுகளில் உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதைக் காட்டுகின்றன.

குறிப்பாக, அமெரிக்காவின் வா்த்தகக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் தொடா்ச்சியான புவிசாா் அரசியல் சவால்கள் ஆகியவை உலகளாவிய வா்த்தக வளா்ச்சியை பாதிக்க வாய்ப்புள்ளது என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

Previous Post

ஈரானின் எரிபொருள் விநியோகம் : இலங்கை நிறுவனம் மீது அமெரிக்கா அதிரடி தடை

Next Post

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய டாப் 5 பிளேயர்ஸ் யார் தெரியுமா?

Next Post
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய டாப் 5 பிளேயர்ஸ் யார் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய டாப் 5 பிளேயர்ஸ் யார் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin