இந்தியா-சிங்கப்பூர் இடையிலான விமானப் பயணம் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதாக சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய தரவுகள் கூறுகின்றன.
கடந்த 2024ம் ஆண்டில் இருநாடுகளும் இடையே பயணித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 5 மில்லியனைத் தாண்டியுள்ளது. இது வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது.
தரவுகளின்படி, 2024ல் மட்டும் விமானப் பயணிகள் எண்ணிகள் 5.5 மில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதை 2023ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 12 சதவீதம் அதிகமாகும்.
மேலும் 2019 தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அது 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தரவு காட்டுகிறது.
வெளிநாட்டு ஊழியர்களே சம்பளம் சரியாக வரவில்லையா? – உங்களுக்கான ஒரே தீர்வு
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் தற்போது முக்கிய பயண இடமாக இந்தியா உள்ளது. அதாவது, சாங்கி விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய இடங்கள் உட்பட 16 இந்திய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ட்ரூக் ஏர், இண்டிகோ, ஸ்கூட் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய ஆறு விமான நிறுவனங்கள் இரு நாடுகளுக்கும் இடையே வாரம்தோறும் சுமார் 280 சேவைகளை வழங்குகின்றன என்று அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவுடன் மிக அதிக பயணங்கள் கொண்ட விமான நிலையம் என்ற அந்தஸ்தை சாங்கி பெற்றுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தேர்வாகியுள்ளது, அந்த அறிவிப்பு ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருதுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ல் மட்டும் சுமார் 67.7 மில்லியன் பயணிகள் வந்து சென்றுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post இந்தியா-சிங்கப்பூர் விமானப் பயணம் வரலாற்று உச்சம் – குவியும் பயணிகள் appeared first on Tamil Daily Singapore.

