மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டதால், பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்ததாகவும், இதேபோன்று தில்லியிலும் நடக்கும் எனக் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது,
”இந்தியா கூட்டணியின் தற்போதைய நிலை என்ன? இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனையும் (உத்தவ் பிரிவு) காங்கிரஸும் அடுத்து வரவுள்ள மும்பை உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து சந்திக்கின்றன.

