Last Updated:
இருதரப்பு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய ஆணைய துணைத் தலைவர் காஜா கல்லாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான உச்சி மாநாடு டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வான் டெர் லேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஐரோப்பிய யூனியன் – இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் முன்னிலையில் ஐரோப்பிய யூனியன் – இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா தரப்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதேபோன்று இருதரப்பு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய ஆணைய துணைத் தலைவர் காஜா கல்லாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.


