• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான அறிக்கை! நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக ஏற்பு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான அறிக்கை! நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக ஏற்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 22, 2026 5:54 PM IST

இலங்கையில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 2025 வரை இந்தியா மொத்தம் 2.94 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது

மாதிரி படம்
மாதிரி படம்

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சிப் பாதைகள் குறித்த விரிவான அறிக்கையை, வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு செவ்வாய்க்கிழமை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான இந்த நிலைக்குழு, ‘இந்தியா-இலங்கை உறவுகள் மற்றும் எதிர்காலப் பாதை’ (India-Sri Lanka relations and the way ahead) என்ற தலைப்பிலான அறிக்கையை முழு உடன்பாட்டுடன் ஏற்றுக்கொண்டுள்ளது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “மிகவும் முக்கியமான இருதரப்பு விவகாரம் என்பதால், விரிவான மற்றும் ஆழமான தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையைத் தயாரித்துள்ளோம். விரைவில் இது பொது ஆவணமாக வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.

இலங்கை இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடாகவும், வரலாற்று ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான பிணைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை மற்றும் ‘மகாசாகர்’ தொலைநோக்குத் திட்டத்தில் இலங்கை முக்கியப் பங்கு வகிக்கிறது.

2025-26 நிதியாண்டில் இந்தியா – இலங்கை இடையேயான பொருட்கள் வர்த்தகம் 7.18 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி 5.52 பில்லியன் டாலராகவும், இலங்கையின் ஏற்றுமதி 1.66 பில்லியன் டாலராகவும் உள்ளது.

இலங்கையில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 2025 வரை இந்தியா மொத்தம் 2.94 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. இதில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 213.67 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தி, விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், உற்பத்தி, தொலைத்தொடர்பு மற்றும் வங்கியியல் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 24 பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

Next Post

"காயங்களுடனான போராட்டத்தில் தோற்றுவிட்டேன்" – கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்!

Next Post
"காயங்களுடனான போராட்டத்தில் தோற்றுவிட்டேன்" – கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்!

"காயங்களுடனான போராட்டத்தில் தோற்றுவிட்டேன்" - கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin