• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து தொடருக்கு முன்பு பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு..! ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொகையில் மாற்றம்

GenevaTimes by GenevaTimes
June 16, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்தியா – இங்கிலாந்து தொடருக்கு முன்பு பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு..! ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொகையில் மாற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தற்போதுள்ள பிசிசிஐ கொள்கையின்படி, குறுகிய கால (4 நாட்களுக்குள்) பயணத்திற்காக ஊழியர்களுக்குக் கொடுப்பனவுத் தொகையாக ரூ.15,000 வழங்கப்படுகிறது. அதுவே ஐபிஎல், டபிள்யூபிஎல் போன்ற நீண்ட கால பயணங்களுக்காக ரூ.10,000 வழங்கப்படுகிறது. அதுவே ஒருமுறைக்கான தற்செயலான பயணங்களுக்குக் கொடுப்பனவாக ரூ.7,500 வழங்கப்படுகிறது.

தற்போது பிசிசிஐ-யின் புதிய கொள்கையின்படி, இந்த தற்செயலான கொடுப்பனவுத் தொகை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அவர்களுக்கு ஒரு நாள் கொடுப்பனவாக ரூ.10,000 வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் வரி நீங்கலாக ரூ.6,500 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் பிசிசிஐ தனது ஊழியர்களுக்கு இந்தக் கொடுப்பனவுத் தொகையை வழங்கவில்லை என்றும், இந்தப் புதிய கொள்கை வகுக்கப்பட்ட பிறகு, இந்தத் தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஐபிஎல் போன்ற தொடர்கள் காரணமாகப் பயணம் மேற்கொள்ளும் ஊழியர்கள் ஒரு நாளுக்கு ரூ.10,000 என்ற தொகையைக் கொடுப்பனவாகப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் குறைந்த நாட்கள் பயணம் செய்யும்பட்சத்தில், அதில் 60 சதவீதமும், பயணமே மேற்கொள்ளவில்லை என்றால், அவர்கள் 40 சதவீதக் கொடுப்பனவும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஒரு நாள் கொடுப்பனவாக 300 அமெரிக்க டாலர்கள் கொடுப்பனவாகக் கொடுக்கப்படும். அதுவே பிசிசிஐ தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்பட்சத்தில் 10,000 அமெரிக்க டாலர்கள் கொடுப்பனவாக வழங்கப்படும்.

மேலும் இந்த நிர்வாகிகள் இந்தியாவிற்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்பட்சத்தில், ஒரு நாள் கொடுப்பனவாக ரூ.40,000 வழங்கப்படும். மேலும் அது பல நாட்கள் தொடர்ந்தால், ரூ.30,000 கொடுப்பனவாக வழங்கப்படும்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Mumbai,Maharashtra

First Published :

June 16, 2025 11:31 AM IST

Read More

Previous Post

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்தவரின் புதிய வீடியோ… விபத்தின்போது பதிவான காட்சி… திக் திக் நிமிடங்கள்!

Next Post

சற்றே குறைந்த தங்கம் விலை: பவுன் ரூ.74,440-க்கு விற்பனை | gold price today fall by rupees 120 per sovereign

Next Post
சற்றே குறைந்த தங்கம் விலை: பவுன் ரூ.74,440-க்கு விற்பனை | gold price today fall by rupees 120 per sovereign

சற்றே குறைந்த தங்கம் விலை: பவுன் ரூ.74,440-க்கு விற்பனை | gold price today fall by rupees 120 per sovereign

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin