Last Updated:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் இந்த தொடரை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டி கேன்பெராவில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியின் சார்பாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக செயல்படுவார். இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 1:45 மணிக்கு தொடங்குகிறது.
நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, அக்சர் படேல், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ப்ளேயில் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
October 28, 2025 5:20 PM IST


