Last Updated:
டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இதற்கு ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இந்திய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ள பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் மிக முக்கிய தகவலை டிரம்ப் பகிர்ந்துள்ளார். இனிமேல், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துகொண்டிருக்கும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் உதவும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இதற்கு ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது.
இது குறித்துப் பேசிய ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக எங்களிடம் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை; இது குறித்து இந்தியாவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


