[ad_1]
வணிகம், வரி விஷயத்தில் இந்தியா – அமெரிக்கா இடையே சமீப காலங்களில் உறவு சரியில்லை.
இந்த நிலையில், பீகாரில் அமெரிக்கா உடனான வணிகம் குறித்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பேசியுள்ளார்.
“2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவரும் வரும் நவம்பர் மாதத்திற்குள் நல்ல ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று இரு தரப்பு அமைச்சர்களிடமும் அறிவுறுத்தி இருந்தனர்.
அந்த ஒப்பந்தத்தின் முதல் பகுதி, முதல் கட்டம், வரும் நவம்பருக்குள் இறுதி செய்யப்பட வேண்டும்.

அதற்காக கடந்த மார்ச் மாதம் முதல், மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நல்ல சூழலில் நடந்து கொண்டிருக்கின்றன. முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் திருப்தியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
நேற்று மோடி மற்றும் ட்ரம்ப் இந்தியா – அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை குறித்து பாசிட்டிவாக பதிவிட்டிருந்தனர்.
இதனையடுத்து, பியூஷ் கோயல் இப்படி பேசியிருப்பது நல்ல விஷயம் தான். இதன் பலன்களும், பயன்களும் சீக்கிரம் மக்களை எட்டினால் மகிழ்ச்சி.