ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்தியாவிடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலன் கருதியே எரிசக்தி கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், எரிசக்தி பாதுகாப்பில் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
கச்சா எண்ணெய்
இந்தநிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டைப் பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைக் கைவிட வேண்டும் என இந்தியாவிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இது தொடர்பாக முனிச் பாதுகாப்பு மாநாட்டில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எண்ணெய் பெறுவதை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ரஷ்யாவிடமிருந்து மட்டுமின்றி இன்னும் சில நாடுகளிலிருந்தும் கச்சா எண்ணெயைப் பெற்று வருவதாக அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை

