Last Updated:
இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதியாகும் பருப்பு உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கு இந்தியா வரித் தளர்வு அளிக்கும் என்ற அம்சத்தை நீக்கி திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அண்மையில் உறுதியானது. அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் எரிபொருள் மற்றும் எரிசக்தி கொள்முதல், அமெரிக்க வேளாண் பொருள் இறக்குமதி உள்ளிட்டவற்றை இந்தியா மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அதில் 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் அமெரிவிக்காவிடம் இருந்து எரிபொருள் எரிசக்தியை கொள்முதல் செய்யும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதை மாற்றி, இந்தியா உத்தேசித்துள்ளதாக குறிப்பிப்பட்டுள்ளது. அதேபோல், புதிய திருத்தப்பட்ட அறிக்கையில் அமெரிக்காவிடம் இருந்து வேளாண் பொருட்கள் அதிலும் குறிப்பாக சில பருப்பு வகைகளை இந்தியா கட்டாயம் வாங்க வேண்டும் என்பதில் இருந்து தளர்வு வழங்கப்பட்டுள்ளது.


