இந்தியாவை வம்பிழுத்த எலான் மஸ்க்… லிஸ்ட் போட்டு பதிலடி தந்த ஸ்ரீதர் வேம்பு..!!
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு இந்தியாவில் முழுமையான அனுமதி கிடைக்காமல் இருக்கிறது. இதற்கு இந்திய பெரு முதலாளிகளின் சதியே காரணம் என எலான் மஸ்க் குற்றம்சாட்டி இருந்தார். மத்திய அரசு தாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை, சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து நிறுவனங்களையும் சமமாகவே பாவிக்கிறோம் என கூறியது. இருந்தாலும் எலான் மஸ்க் தொடர்ச்சியாக இந்தியாவை வம்பிழுத்து கொண்டே இருக்கிறார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட எலான் மஸ்க் அன்பிற்குரிய பிரதமர் அம்பானி, என்னை மன்னித்துவிடுங்கள் நீங்கள் தான் இந்தியாவின் உண்மையான தலைவன் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது என கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எலான் மஸ்கிற்கு சோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

எலான் மஸ்கின் பதிவை குறிப்பிட்டு பதில் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவில் டேட்டா கட்டணம் உலகிலேயே மிக குறைவான விலையில் கிடைக்கிறது. உள்ளூரில் பயணிக்கும் போது வைஃபை கூட தேவையில்லை, மொபைல் டேட்டாவையே டெத்தரிங் செய்து பயன்படுத்துவோம். மலிவான விலையில் பெரிய டேட்டா திட்டங்கள் கிடைப்பதால், இந்தியர்கள் பொதுவாக இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் இந்த குறைந்த டேட்டா விலைக்கு ரிலையன்ஸ் ஜியோவின் வருகையே முக்கிய காரணம் என முகேஷ் அம்பானியை பாராட்டியுள்ளார்.
உலகிலேயே குறைந்த விலையில் மருந்து பொருட்கள் கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கூட இந்தியாவில் இருந்து மருந்துகளை வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தை கொண்ட பேமெண்ட் அமைப்பான ‘யுபிஐ’இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, சராசரி இந்தியனுக்கு பலன்கள் சென்றடையும் வகையில் ஒரு போட்டி நிறைந்த பொருளாதாரத்தை உருவாக்க கடுமையாக உழைத்துள்ளார் என்றும், அவரது அரசாங்கம் எந்தவொரு பாகுபாட்டையும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்றும் வேம்பு கூறியுள்ளார்.
India has the among the lowest data prices in the world. It is so good that I dont even bother to connect to local Wifi when I travel in India and just tether my phone to work on my computer. Indians routinely have dual SIM phones with large data plans because they are so affordable. Ambanis launch of Jio is directly responsible for the low data prices Indians enjoy.India has among the lowest drug prices in the world (and going lower still). People who visit India buy medicines to take home quite regularly now.India has among the lowest cost payment systems in the world in UPI.On the other hand, Tesla is protected from Chinese competition in the US market, keeping EV prices higher in America than elsewhere. Prime Minister Modi has worked hard to create a competitive economy where the benefits flow to the average Indian. His government does not tolerate monopolies. He has also actively promoted and encouraged a massive surge in startups and that is the best signal of a highly competitive economy. Directly due to Modi government policy, Indian startups are making major advances in low cost rockets and that poses a threat to SpaceX the same say the Chinese EVs threaten Tesla.These are the facts Elon.
— Sridhar Vembu (@svembu) October 10, 2026“>
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளால், இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் குறைந்த செலவிலான ராக்கெட்டுகளை தயாரிப்பதில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என கூறியுள்ளார்.
அதே வேளையில் டெஸ்லாவுக்கு போட்டி என்பதால் தான் அமெரிக்காவில் சீன எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கடுமையான வரி விதிப்புகள் மற்றும் மென்பொருள் தடை போன்ற கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சீன நிறுவனங்கள் அமெரிக்க சந்தைக்குள் நுழைவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டெஸ்லா அதிக விலைக்கு மின்சார வாகனங்களை விற்க முடிகிறது என குறிப்பிட்டுள்ளார். இவைதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், எலான் என ஸ்ரீதர் வேம்பு பதில் தந்துள்ளார்.
ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் இணைய சேவை வழங்க விண்ணப்பம் செய்துள்ளது. இதற்கு முழு அனுமதி கிடைக்காத நிலையில் அம்பானியின் ஜியோ நிறுவனம் தான் இதற்கு காரணம் என நேரடியாக எலான் மஸ்க் சாடியுள்ளார். ஆனால் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிாதித்ய சிந்தியா செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு (Satcom) துறையில் மூன்று நிறுவனங்கள் வணிக உரிமத்தை பெறுவதற்கான இறுதி ஒப்புதலுக்காக வரிசையில் உள்ளன. அவை ரிலையன்ஸ் ஜியோ, ஒன்வெப் மற்றும் ஸ்டார்லிங்க். இந்திய அரசு அனைத்து நடைமுறைகளையும் முறையாக பின்பற்றி வருவதாகவும், ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு எதிராக எந்தவிதமான அநியாயமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் தந்தார்.

