• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவைவிட துபாயில் தங்கத்தின் விலை மலிவாக இருப்பது ஏன்…? முக்கிய சுங்க விதிமுறைகள் இவைதான்…!

GenevaTimes by GenevaTimes
March 9, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவைவிட துபாயில் தங்கத்தின் விலை மலிவாக இருப்பது ஏன்…? முக்கிய சுங்க விதிமுறைகள் இவைதான்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கன்னட திரையுலகில் ஓரளவுக்கு அறியப்படும் நடிகையாக இருக்கும் ரன்யா ராவ், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை எடுத்து வந்ததை, வருவாய் அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, தடுத்து நிறுத்தப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரது வீட்டில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த சோதனைகளில், கூடுதலாக ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.2.67 கோடி மதிப்புள்ள பணமும் கண்டுபிடிக்கப்பட்டது.

“உளவுத்துறை தகவலின் அடிப்படையில், மார்ச் 3ஆம் தேதி எமிரேட்ஸ் விமானத்தில் துபாயிலிருந்து பெங்களூருக்கு வந்த சுமார் 33 வயதுடைய இந்தியப் பெண்ணை டிஆர்ஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சோதனையில், 14.2 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை புத்திசாலித்தனமாக அவரது உடலில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது” என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இதைத் தொடர்ந்து, பெங்களூருவின் லாவெல் சாலையில் உள்ள அவரது வீட்டில் டிஆர்ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு அவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த சோதனையின்போது, ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.2.67 கோடி மதிப்புள்ள இந்திய பணமும் பறிமுதல் செய்யப்பட்டன” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1962ஆம் ஆண்டு சுங்க வரிச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ், அந்தப் பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. இப்படி இருக்க, துபாயில் தங்கத்தின் விலை இந்தியாவை விட பெரும்பாலும் குறைவாக இருப்பதற்கும், தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு துபாய் தங்கச் சந்தை ஏன் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது என்பது குறித்தும் இனி ஆராய்வோம்.

இறக்குமதி வரிகள் மற்றும் வரி கொள்கைகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, துபாயில் தங்கத்தின் விலை இந்தியாவை விடக் குறைவாக உள்ளது. தற்போது, துபாயில் 24 காரட் தங்கத்தின் 10 கிராம் விலை தோராயமாக ரூ.72,430 ஆகும். அதே நேரத்தில் இந்தியாவில் அதன் விலை ரூ.90,000 ஆகும்.

இதையும் படிக்க: PF பணத்தை எடுக்க எங்கும் அலைய வேண்டாம்… இனி ATM-க்கு போனாலே போதும்..! அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

இருப்பினும், துபாயிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கொண்டு வரும்போது, சுங்க விதிமுறைகளை கருத்தில் கொள்வது மிக முக்கியம். ஆண் பயணிகள் சுங்க வரி இல்லாமல் 20 கிராம் (ரூ.50,000 மதிப்புள்ள) வரை கொண்டு வரலாம். அதே நேரத்தில், பெண் பயணிகளுக்கு 40 கிராம் (ரூ.1,00,000 மதிப்புள்ள) தங்க நகைகளை கொண்டு வர அனுமதி உள்ளது. எனினும், இந்த விதி நகைகளுக்கு மட்டுமே பொருந்தும், தங்கக் கட்டிகள் அல்லது நாணயங்களுக்கு இது கருத்தில் கொள்ளப்படாது. எனவே, இந்த வரம்புகளை மீறுவது சுங்க வரிக்கு உட்படுத்தக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், இது தங்கத்தின் மதிப்பில் 10% முதல் 12% வரை இருக்கலாம்.

First Published :

March 09, 2025 10:48 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்தியாவைவிட துபாயில் தங்கத்தின் விலை மலிவாக இருப்பது ஏன்…? முக்கிய சுங்க விதிமுறைகள் இவைதான்…!

Read More

Previous Post

Rohit Sharma : இன்று ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் ஷர்மா? அஜித் அகர்கருடன் ஆலோசிக்க இருப்பதாக தகவல்!

Next Post

சிரியா: அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 340 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு – பகீர் தகவல் | Makkal Osai

Next Post
சிரியா: அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 340 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு – பகீர் தகவல் | Makkal Osai

சிரியா: அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 340 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு - பகீர் தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin