“கரப்பான் பூச்சிகளைப் போன்ற சில இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் கிடைப்பதில்லை. இத்தொழில் துறையிலும் இவர்களுக்கு எவ்வித இடமும் இல்லை. இவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சிலர் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களாகவும், சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலர்களாகவும், மற்றும் சிலர் பிற செயற்பாட்டாளர்களாகவும் மாறி, அனைவர் மீதும் தாக்குதல் தொடுக்கத் தொடங்குகின்றனர்” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடந்த 15ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணையில் தெரிவித்தார்.

