இதனைத் தொடர்ந்து, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் ஒருசார்புடையாதாக மட்டுமே இருக்காது எனவும், இருநாடுகளுக்கு இடையில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்காவில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று, பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகர்த்தது.
அதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் தொடங்கிய போரானது, மே 10 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதில், இந்தியா – பாகிஸ்தான் இடையில் போர்நிறுத்தம் ஏற்பட தானே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

