இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னைகள் முடிவிலாமல் நீண்டுகொண்டே இருக்கும்நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அந்நாட்டு துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிச்சை எடுக்காது. இருப்பினும், இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளிலும் கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.

