சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் வர்த்தக, தொழில்துறை துணையமைச்சர் (MOS) கன் சியோ ஹுவாங் இந்தியா சென்றுள்ளார்.
இருதரப்பு பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது மேலும் தொழில்நுட்பம், நகர்ப்புற மேம்பாடு, தளவாடங்கள் மற்றும் தொழில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இருநாட்டு உறவை விரிவுபடுத்துவதும் இந்த பயணத்தின் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது.
லிட்டில் இந்தியா: தேக்கா நிலையத்தில் வார இறுதியில் ஏற்படும் சண்டை சச்சரவுகள்… காவல்துறை தலையீடு
நவம்பர் 12 முதல் 14 வரை அவர் இந்தியாவில் இருப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பின் “சிங்கப்பூர் வர்த்தக நிலையத்தை” (SEC) திறந்து வைப்பதற்காக நேற்று (நவம்பர் 13) கர்நாடகாவின் பெங்களூருவுக்கு சென்றார்.
இதனை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் நேற்று, ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு அவர் சென்றார், அங்கு இந்தியாவின் முதன்மையான பொருளாதார மன்றங்களில் ஒன்றான 30வது இந்திய வர்த்தக கூட்டமைப்பு (CII) உச்சிமாநாட்டிற்காக தேசிய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகத்துடன் கலந்துகொண்டார் என தகவல் கூறப்பட்டுள்ளது.
The post இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் வர்த்தக, தொழில்துறை துணையமைச்சர் appeared first on Tamil Daily Singapore.

