• Login
Friday, July 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா சம்மதம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா சம்மதம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 09, 2026 12:32 PM IST

இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகளை எட்டும் நோக்கில், இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய  பிரதமருடன் பிரதமர் மோடி
ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்ற 3-வது ஆண்டு கூட்டு உச்சிமாநாட்டில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி  இலக்குகளை எட்டும் நோக்கில், இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது.

2015-ஆம் ஆண்டின் இருதரப்பு அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ், அமைதியான தேவைகளுக்காக மட்டுமே இந்த யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும் என்று ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.

இதுதவிர, இரு நாடுகளும் இணைந்து பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (CECA), இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ‘பாதுகாப்பு வழித்தடம்’ (Defence Innovation Corridor) ஆகியவற்றை உருவாக்க முடிவு செய்துள்ளன.

மேலும், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ககன்யான்’ விண்வெளித் திட்டத்திற்கு ஆதரவாக, கோகோஸ் தீவுகளில் தற்காலிக விண்வெளி கண்காணிப்பு நிலையத்தை அமைக்கவும் ஆஸ்திரேலியா சம்மதித்துள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமர் மோடி பேசுகையில்,

“இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் துடிப்பான ஜனநாயக நாடுகள், பன்முக கலாச்சாரம் கொண்ட சமூகங்கள் மற்றும் முக்கியமான கடல்சார் வல்லரசுகள். இரு நாடுகளின் உலகளாவிய பார்வையும் ஒன்றாக இருப்பதால் பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் உறவு மேலும் வலுவடைகிறது.” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானீஸ் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்று என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் வலுவாக மாறியுள்ளது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

First Published :

Jul 09, 2026 12:32 PM IST

Read More

Previous Post

நீர்கொழும்பு சிறைக் கலவரம் : நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

Next Post

SBI FD Scheme | எஸ்பிஐ-ல் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.1,05,985 வட்டி கிடைக்கும்.. அசத்தல் திட்டம்.. மிஸ் பண்ணாதீங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
SBI FD Scheme | எஸ்பிஐ-ல் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.1,05,985 வட்டி கிடைக்கும்.. அசத்தல் திட்டம்.. மிஸ் பண்ணாதீங்க! | வணிகம் போட்டோகேலரி

SBI FD Scheme | எஸ்பிஐ-ல் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.1,05,985 வட்டி கிடைக்கும்.. அசத்தல் திட்டம்.. மிஸ் பண்ணாதீங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin