அந்த மனுவில், `தான் பாகிஸ்தான் முஸ்லிம் என்பதால் என்னை இந்தியாவில் கடுமையாக சித்ரவதை செய்யும் அபாயம் இருக்கிறது. மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பதால் என்னை இந்தியாவில் அதிக அளவில் சித்ரவதை செய்யக்கூடும். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதோடு தனக்கு சிறுநீரக கோளாறு, கேன்சர், இருதய பிரச்னை என பல்வேறு மருத்துவ பிரச்னைகள் இருக்கிறது. எனவே இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு தடை விதிக்கவேண்டும். இந்தியாவிற்கு நாடு கடத்த தடை விதிக்கப்படாவிட்டால், எந்த ஒரு மேல் முறையீடும் இருக்காது. மேலும் அமெரிக்க நீதிமன்றங்கள் அதிகார வரம்பை இழக்கும். தான் விரைவில் இறந்துவிடுவேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவனது வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் இந்தியாவுக்கு நாடுகடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் ராணாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது.
மும்பை தாக்குதல் சதியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டேவிட் ஹட்லியுடன் சேர்ந்து ராணா சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாக்டரான ராணா பாகிஸ்தான் ராணுவத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு கனடாவில் குடியுரிமை பெற்றுக்கொண்டு கனடாவிற்கு சென்றுவிட்டார். ராணா இந்தியாவுக்கு எந்நேரமும் நாடு கடத்தப்படலாம். ராணா கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

