பிரிட்டனில் இருந்து அண்மையில் 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தது குறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் பிரிட்டனில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து ஏன் இவ்வளவு தங்கம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது என்று பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இதற்கு சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க இந்தியா தனது தங்க இருப்பிலிருந்து கணிசமான பகுதியை அடமானம் வைத்தது. அப்போது தங்கத்தை அடகு வைத்து டாலர்களை திரட்டியது இந்திய அரசு. மேலும் பல நாடுகளும் தங்களது தங்கத்தை இங்கிலாந்திலுள்ள வங்கியில் சேமித்து வைத்திருப்பதால், தற்போது இந்த தங்கம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “ரிசர்வ் வங்கி தனது தங்கத்தின் இருப்பை அதிகரித்து வருகிறது. இதனால், இங்கு தங்கத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. மேலும், தங்கத்தை சேமித்து வைக்க தற்போது இடம் இடமிருப்பதால், இந்தியாவுக்கு வெளியே இருந்த தங்க கையிருப்பின் ஒரு பகுதியை, மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வந்து சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதுவே முக்கிய காரணம். இதைத் தவிர வேறு எதையும் யூகிக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:
உங்கள் PF கணக்கில் ரூ 5 லட்சம், ரூ 10 லட்சம் இருந்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
இந்த நடவடிக்கையின் மூலம், பேங்க் ஆஃப் இங்கிலாந்துக்கு, மத்திய ரிசர்வ் வங்கி செலுத்தும் கட்டண செலவு இனி இல்லை. இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஆர்பிஐ கொண்டு வந்த 100 டன் தங்கப் பரிமாற்றத்திற்குப் பிறகு, இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள மொத்த தங்கத்தின் எடை 408 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஆர்பிஐ வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, இந்தியாவில் வெளியிடப்பட்ட நோட்டுகளுக்கு ஆதரவாக, 308 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. மேலும் 100.28 டன்கள் வங்கித் துறையின் சொத்தாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தங்கத்தை சேமிக்க இங்கிலாந்தை ஏன் தேர்வு செய்கிறார்கள்?
உலக நாடுகளுக்கு தங்கத்தை சேமித்து வைக்க இங்கிலாந்து முதல் தேர்வாக இருக்கிறது. இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே லண்டனில் தங்கத்தை வைத்துள்ளது. போர், இயற்கை சீற்றங்கள், அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டே, வெளிநாடுகளில் தங்கம் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இதில், இங்கிலாந்து வங்கி வலுவான பாதுகாப்பு அமைப்பு மற்றும் தங்க சேமிப்பை கையாளும் சிறப்பு நிபுணத்துவம் பெற்றது என்பதால், அங்கு இந்தியாவும் தங்கத்தை சேமித்து வைக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)