• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத பிரச்சனை.. 2050ல் பூகம்பமாய் வெடிக்குமா? | India’s Hidden Economic Ticking Time Bomb: Why the 367-Million Youth Employability Crisis Threatens 2050 Growth

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத பிரச்சனை.. 2050ல் பூகம்பமாய் வெடிக்குமா? | India’s Hidden Economic Ticking Time Bomb: Why the 367-Million Youth Employability Crisis Threatens 2050 Growth
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத பிரச்சனை.. 2050ல் பூகம்பமாய் வெடிக்குமா?

இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து பேசும்போது 2045ல் 2050ல் இந்தியா எப்படி இருக்கும்? என்பதே முக்கிய விவாதமாக இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியா சந்திக்கக்கூடிய மிகப்பெரிய சவால் ஒன்று உள்ளது. அதுதான் வேலைவாய்ப்பு.

உலகிலேயே அதிகப்படியான Young Workforce அதாவது இளம் தொழிலாளர்கள் கொண்ட நாடு இந்தியா. ஐநா வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் படி இந்தியாவில் சுமார் 36.7 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 28 சதவீதமாகும். ஆனால் இவர்களுக்கு போதுமான வேலவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறதா..? என்றால் இல்லை என்பதே உண்மை.

இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத பிரச்சனை.. 2050ல் பூகம்பமாய் வெடிக்குமா?

இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகள் (விவசாயம் + விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள்) உருவாக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இன்றைய 22 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் அடுத்த 6-7 ஆண்டுகளில் 30 வயதைத் தாண்டிவிடுவார்கள்.

இந்த இடைப்பட்ட காலத்திற்குள் அவர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைத்து போதுமான வருமானமும், அனுபவமும் கிடைக்காவிட்டால் என்னாகும். அவர்களின் வாழ்க்கையை தாண்டி நாட்டின் ஒட்டுமொத்த நுகர்வு, வீடுகள் விற்பனை, திருமணம், குடும்ப அமைப்பு என நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போடக்கூடியதாக இருக்கும்.

இத்தகைய பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது தான் மத்திய மாநில அரசுகளின் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

இந்தியாவில் தனியார் துறையில் பல துறைகள் வேகமாக வளர்ச்சி அடைந்தாலும் வருடம் 1 கோடி பேருக்கான வேலைவாய்ப்பு என்பதை உருவாக்க இயலாத ஓன்றாக இருக்கிறது. இந்த நிலையில் அரசு வேலை மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தங்கம் நகை, சொந்த வீடு போல் அரசு வேலையும் ஒரு முக்கிய அந்தஸ்து என்ற நிலை இந்தியா முழுவதும் உள்ளது. இதை போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது நமக்கு படம் போட்டு காட்டுகிறது.

வெறும் 15,118 பணியிடங்களுக்கு 2025 SSC CGL தேர்வுக்கு மட்டும் 28 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 3.5 ஆண்டுகளில் RRB தேர்வுகளில் சுமார் 4 கோடி பங்கேற்றுள்ளனர். இதன் பின்னால் இருப்பது வெறும் அரசு வேலை மீதான விருப்பம் மட்டுமல்ல.

அரசு வேலை என்பது நிலையான வருமானம், நிரந்தர வேலை பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் சமூக அந்தஸ்து போன்ற காரணங்களால் தனியார் துறையில் வேலைவாய்ப்பை பெற முடியாத பலர் அரசு வேலை என்பது பல லட்சம் இளைஞர்களின் Lifetime Target ஆக மாறியுள்ளது.

இதனால் பல லட்சம் இந்தியர்கள் பல ஆண்டு முயற்சி செய்து காத்திருந்து தேர்வுகளை எழுதி வருகின்றனர், ஆனால் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்குமா என்றால் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இதனால் 22 வயதில் போட்டி தேர்வுக்குத் தயாராக தொடங்கும் ஒரு நபர் 25, 27 அல்லது 30 வயதிலும் தேர்வுக்காக தயாராகிக் கொண்டு இருக்கும் நிலை உள்ளது. இந்த 6-7 வருட ஒவ்வொரு இளைஞரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமானது, 30 வயதில் புதிதாக வேலை தேட துவங்கினால் இப்போட்டி மிகுந்த உலகில் வெற்றி பெறுவது கடினம்.

இந்த வேலைவாய்ப்பு பிரச்சனையை சமாளிக்க இந்தியாவின் உற்பத்தி துறை மிகவும் அற்புதமான துறை, இங்கு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியில் அமர்த்த முடியும். ஆனால் இந்தியாவின் உற்பத்தித் துறையின் GVA பங்கீடு கடந்த 20 வருடத்தில் 16-18% அளவிலேயே சிக்கியுள்ளது. இதனால் உற்பத்தி துறையில் அதிரடியான வளர்ச்சி இல்லாமல் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது கடினம்.

இன்றைய இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அந்த ஆண்டுகளில் பெற்றிருக்க வேண்டிய அனுபவம் கிடைக்காமல் போகலாம், அவர்களின் வருமானமும் எதிர்பார்த்த அளவில் அதிகரிக்காமல் இருக்கலாம்.

இவை அனைத்தும் தனிநபரிடம் வருமானம் குறைத்து, பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பம் சேவை துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை முழுங்கி வரும் வேளையில் அடுத்த பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது.

உதாரணமாக பல ஆண்டுகளாக ஒருவர் போட்டித் தேர்வுக்காக படித்து, பின்னர் 30 வயதில் வேறு துறைக்கு செல்ல முயற்சிக்கும்போது அவரிடம் டிகிரி இருந்தாலும், தொழில்துறை அனுபவம் இல்லாமல் இருக்கலாம்.

இதை unemployed என்பதைக் காட்டிலும் ஆபத்தான employability crisis-ஆக மாறக்கூடும் என்பது தான் இந்தியாவை துரத்தும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு தீர்வு வேலை + திறன் + உற்பத்தி + முதலீடு + ஏற்றுமதி ஆகியவை ஒன்றாக வேண்டும்.

ஜூலை மாதம் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவு 5.1 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article

English summary

India’s Hidden Economic Ticking Time Bomb: Why the 367-Million Youth Employability Crisis Threatens 2050 Growth

India’s Hidden Economic Ticking Time Bomb: Why the 367-Million Youth Employability Crisis Threatens 2050 Growth — இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்ணுக்கு தெரியாத பிரச்சனை.. 2050ல் பூகம்பமாய் வெடிக்குமா?

Story first published: Monday, September 7, 2026, 21:29 [IST]

Other articles published on Sep 7, 2026

Read More

Previous Post

துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல்.. ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட தலை.. அதிர்ச்சி சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மருத்துவமனைகளில் நடைபெறும் பாலியல் தொல்லை மற்றும் கொடுமைப்படுத்துதல் தொடர்பான புகார்களை விசாரிக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் – மலேசிய மருத்துவ சங்கம் – Malaysiakini

Next Post

மருத்துவமனைகளில் நடைபெறும் பாலியல் தொல்லை மற்றும் கொடுமைப்படுத்துதல் தொடர்பான புகார்களை விசாரிக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் – மலேசிய மருத்துவ சங்கம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin