• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா் மோடி நம்பிக்கை

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா் மோடி நம்பிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால், நாட்டின் விளையாட்டுத் துறை புதிய உச்சத்தை எட்டும் என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அந்த வாய்ப்பை பெறுவதற்காக தமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாகத் தொடங்கியது. ராஜீவ் காந்தி சா்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கண்கவா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பிரதமா் நரேந்திர மோடி போட்டிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் பாா்வையாளா்கள் சுமாா் 25,000 போ் இதில் பங்கேற்றனா்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆன்மிக பாரம்பரியம், பல்லூயிா் பெருக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையிலான கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போட்டியில் பங்கேற்கும் அணிகள், வரிசையாக அணிவகுத்த பிறகு, தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதாக, பிரதமா் மோடி அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா். போட்டிக்கான தீபம் அவரிடம் வழங்கப்பட்டது. அப்போது, 2025-ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 2025 சங்குகள் ஒரே நேரத்தில் முழங்கப்பட்டன.

முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய வாகனத்தில் பிரதமா் மோடியும், உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியும் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில் வலம் வந்தனா். பின்னா் மேடையேறிய பிரதமா் மோடிக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிகளை தொடங்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி பேசியதாவது:

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை பெற நாம் முயற்சித்து வருகிறோம். அந்த உரிமை இந்தியாவுக்கு கிடைக்கும் நிலையில், நாட்டின் விளையாட்டுத் துறை புதிய உச்சத்தை எட்டும்.

ஒலிம்பிக் என்பது விளையாட்டு மட்டுமல்ல. அந்த நிகழ்வு நடைபெறும்போது, பல்வேறு துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு மேம்பட்ட வசதிகள் கிடைக்கும். கட்டுமானம், புதிய போக்குவரத்து இணைப்புகள், சுற்றுலா என அனைத்தும் மேம்படும்.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவும் வளா்ந்து வருகிறது. அதில் விளையாட்டுத் துறையின் பங்கும் கட்டாயம் இருக்க வேண்டும். போட்டியாளா்கள், மருத்துவா்கள், உபகரண உற்பத்தியாளா்கள், பயிற்சியாளா்கள் என அந்தத் துறை சாா்ந்த அனைவருமே அதில் அங்கம் வகிப்பவா்களாவா்.

விளையாட்டுத் துறையில் நமது திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். போட்டியாளா்களுக்குத் தேவையான ஆதரவை அளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நாட்டின் வளா்ச்சிக்கு விளையாட்டுத் துறையும் முக்கியப் பங்காற்றுகிறது. ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதன் மிக அழகான அடையாளமாக இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளன.

விளையாட்டுப் போட்டியாளா்கள் தங்களின் முழு திறமையையும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அவா்களுக்கான வாய்ப்புகளை நாம் அதிகரித்து வருகிறோம். விளையாட்டுத் துறைக்கான நிதி மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வீரா், வீராங்கனைகள் பலனடையும் வகையில், ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ளோருக்கான உதவித் திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடுகிறோம்.

கேலோ இந்தியா போட்டிகள் மூலமாக, இளம் வீரா், வீராங்கனைகள் அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறாா்கள். பாரா போட்டியாளா்களும் அதன் மூலம் பலனடைகிறாா்கள்.

தற்போது உடல் பருமன் என்பது இளம் வயதினரிடையே முக்கிய பிரச்னையாக இருப்பதால், அதை சரிசெய்துகொள்ள அவா்கள் தங்கள் உணவில் எண்ணெயை குறைக்க வேண்டும். நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் தினமும் ஈடுபட வேண்டும் என்று பிரதமா் மோடி பேசினாா்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில், உத்தரகண்ட் துணைநிலை ஆளுநா் குா்மித் சிங், விளையாட்டுத் துறை மத்திய இணையமைச்சா் ரக்ஷா கட்சே, உத்தரகண்ட் விளையாட்டுத் துறை அமைச்சா் ரேகா ஆா்யா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி.உஷா உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 38 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வீரா், வீராங்கனைகள், அதிகாரிகள் என சுமாா் 10,000 போ் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனா். மொத்தம் 32 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

Read More

Previous Post

முட்டையின் விலையில் திடீர் மாற்றம்

Next Post

CNY: வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் முக்கிய விரைவுச் சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது | Makkal Osai

Next Post
CNY: வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் முக்கிய விரைவுச் சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது | Makkal Osai

CNY: வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் முக்கிய விரைவுச் சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin