• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடிக்கு ரஷ்யா பதிலடி; மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 2, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடிக்கு ரஷ்யா பதிலடி; மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்:

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா விரும்பாததால் 25% வரி விதித்துள்ள நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ரஷ்ய எல்லைக்கு அமெரிக்க அணு நீர்மூழ்கி கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சையின் மையத்தில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகள் முன்னர் கடுமையாக விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது 25% கூடுதல் இறக்குமதி வரியுடன், அபராதமும் விதிக்க அமெரிக்க அதிபர் புதன்கிழமை அன்று அறிவித்தார்.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும் என்றும் ஏற்கனவே டிரம்ப் எச்சரித்திருந்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மட்டுமின்றி ராணுவத் தளவாடங்களையும் இந்தியா வாங்கி வருகிறது. இதுவும் டிரம்புக்கு பிடிக்கவில்லை. மேலும் அமெரிக்காவின் விவசாய மற்றும் பால் பண்ணைப் பொருட்களுக்கு இந்திய சந்தையைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

ஆனால், கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து வந்தது. உக்ரைன் மீது போரை தொடுத்துள்ள ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கி, அதன் வருவாயை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

ரஷ்யத் தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்டாலும் கூட, எதிரி நாட்டின் மீது தானாகவே அணு ஆயுதத் தாக்குதலைத் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கொடூரமான அமைப்பை அவர் சுட்டிக்காட்டியது, அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி அணு ஆயுத மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது. டிமிட்ரி மெத்வதேவின் இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ராணுவ ரீதியிலான பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற டிரம்ப், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘ரஷ்யாவின் முட்டாள்தனமான மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ரஷ்ய எல்லைப் பகுதிகளில் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் – அமெரிக்க அதிபர் இடையிலான வார்த்தைப் போர், தற்போது அமெரிக்கா – ரஷ்யா இடையிலான ராணுவ மோதலாக மாறுமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகையில், ‘அமெரிக்கா – ரஷ்யா இடையிலான மோதல் நேரடிப் போராக மாற வாய்ப்பு குறைவு எனக் கருதினாலும், தவறான கணிப்புகளோ அல்லது எதிர்பாராத சம்பவங்களோ பதற்றத்தை தீவிரப்படுத்தக்கூடும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அமையும் அதேவேளையில், இரு அணு ஆயுத வல்லரசுகளின் இந்த அதிகாரப் போட்டி, உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், மூன்றாம் உலக போராக வெடிக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று கூறினர்.



Read More

Previous Post

AirFare High : ஆகஸ்டில் விமான டிக்கெட்டுகள் 80 சதவீதம் வரை உயர்வு.. என்ன காரணம் தெரியுமா? | வணிகம்

Next Post

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் காலமானார்

Next Post
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் காலமானார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin