இந்தச் சம்பவம், ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில் அதிகரித்துவரும் இனவெறியை எடுத்துக்காட்டும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. வீடியோவில் இடம்பெற்றுள்ள உள்ளூர் பெண், ஸ்வாதியை அயர்லாந்தில் தங்க அனுமதித்தது யார் என்று கேட்டு, பின்னர் “நீ ஏன் அயர்லாந்தில் இருக்கிறாய்? இந்தியாவுக்குத் திரும்பிப் போ” என்று கேட்கிறார். தனது இந்த அனுபவத்தை, ஸ்வாதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது தனக்கு மிகவும் வருத்தத்தையும், தொந்தரவையும் தந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஸ்வாதி தனது பயோவில், “நான் நடந்து செல்லும் தெருவில் என் இருப்பை மற்றொருவருக்கு விளக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஒரு பெண் என் ஜிம்மிற்கு வெளியே என்னை நிறுத்தி, நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்பதைக் கேட்டு, தன்னை ‘இந்தியாவுக்குத் திரும்பிப் போ’ என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார். அவரது அந்தக் கேள்விகளால் சில கணங்கள், நான் உறைந்து போனேன்.
பின்னர், மௌனம் வெறுப்பை வளர்க்க மட்டுமே உதவுகிறது என்பதை உணர்ந்தேன். இனவெறி, மிரட்டல் மற்றும் வெறுப்பு இன்னும் இங்குள்ள தெருக்களில் சுதந்திரமாக நடமாடுவதால், இது யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக நான் அதனை வீடியோவாகப் பதிவு செய்து புகார் அளித்துள்ளேன், சமூக வலைத்தளங்களிலும் அதனைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.
ஸ்வாதி மேலும் கூறும்போது, “நேற்று மாலை, ஜிம்மில் பயிற்சியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சில படிகள் தொலைவில், ஒரு பெண் ‘என்னை மன்னியுங்கள்!” என்று கத்தினாள். அவள் நன்றாக உடையணிந்து ‘DCU’ பேட்ஜ் அணிந்திருந்தாள். ஆனால், பின்னர் அவளுடைய தொனி மாறி, “நீ ஏன் அயர்லாந்துக்கு வந்தாய்? நீ இங்கே என்ன செய்கிறாய்? நீ ஏன் இந்தியாவுக்குத் திரும்பக் கூடாது?” என்று கேட்டாள். நான் அமைதியாகப் பதிலளித்தேன், “நான் இங்கே வேலை செய்கிறேன், எனக்கு இங்கே இருக்க பிடிக்கும்” என்றேன்.
ஆனால் அவள் என் அருகில் வந்து, “சில சமயங்களில் என்னைத் தொட்டு, எனக்கு விசா இருக்கிறதா?, நான் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளேனா?” என்று கேட்க ஆரம்பித்தாள். “இந்திய மக்களுக்கு இந்த அரசு சுதந்திரம் தருகிறதா? என்று கூட கேள்வி எழுப்பினார்” என்றார். ஸ்வாதியின் இந்தப் பதிவு வைரலான நிலையில், நெட்டிசன்கள் ஸ்வாதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
யூசர் ஒருவர், ‘மன்னிக்கவும், இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. உங்கள் புகாருக்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்’ என்றார். மற்றொருவர், “இது போன்ற ஒரு சூழலை நீங்கள் எதிர்கொண்டதை நினைத்து நான் வருந்துகிறேன். உங்கள் இருப்பை யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
October 20, 2025 2:57 PM IST
“இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்”…! அயர்லாந்தில் இந்தியப் பெண் மீது இனவெறி தாக்குதல்…! வைரலாகும் வீடியோ…

