Last Updated:
கிறிஸ் பிராட் இந்தியா அணிக்கு ஆதரவாக நடுவர் பணியில் அரசியல் அழுத்தம் இருந்ததாக கூறியுள்ளார். 2003 முதல் 2024 வரை 622 போட்டிகளில் நடுவராக இருந்தார்.
இந்தியாவுக்குச் சாதகமாக நடந்துகொள்ளுமாறு தான் நிர்பந்திக்கப்பட்டதாக ஐசிசி கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் நடுவர் கிறிஸ் பிராட் கூறியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான நடுவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவருமான கிறிஸ் பிராட் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், குறைந்த ஓவர் விகிதத்தில் இருந்த இந்திய அணிக்கு ஆதரவாக செயல்படுமாறு தனக்கு அலைபேசி அழைப்பு வந்ததாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டம் முடியவிருந்த சூழலில் 3, 4 ஓவர்கள் இந்தியாவுக்கு குறைவாக இருந்ததால் அபராதம் விதிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது, அலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதில், ” அமைதியாக இருங்கள், ஏனெனில் இது இந்தியா” என்று அவர் கூறியதாகவும் கிறிஸ் பிராட் தெரிவித்துள்ளார். மேலுமை் நேரத்தை எப்படியாவது சரிசெய்து அபராதத்திலிருந்து தப்பிக்க வையுங்கள் என்று அந்த அழைப்பில் கூறப்பட்டது. நானும் சில காரணங்களைக் கண்டுபிடித்து, அபராத வரம்புக்குக் கீழ் கொண்டு வந்தேன
அடுத்த ஆட்டத்திலும் அதே நிலை தொடர்ந்தது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த கங்கலியிடம் நான் வேகப்படுத்த சொன்னே். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. நான் திரும்ப போன் செய்து செய்து இப்போது என்ன செய்ய வேண்டுமென்று கேட்டேன். அதற்கு இந்த முறை அவரை (சவுரவ் கங்குலி) தண்டியுங்கள் என்றனர். இதிலிருந்து கிரிக்கெட் ஆரம்பம் முதலே அரசியல் இருந்ததை நான் உணர்ந்து கொண்டேன் என்றுள்ளார்.
2003 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2024 வரை பிராட் 123 டெஸ்ட் போட்டிகள், 361 ஒருநாள் போட்டிகள் மற்றும் 138 டி20 போட்டிகளுக்கு ஐசிசி போட்டி நடுவராகப் பொறுப்பேற்றார். மேலும் அவர் தொடர விருப்பம் தெரிவித்த போதிலும், உலக கிரிக்கெட் அமைப்பு அவரது ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
October 28, 2025 1:12 PM IST


