Last Updated:
COVID-19 update | இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் 5,364 ஆக அதிகரித்துள்ளனர். LF.7 மற்றும் NB.1.8.1 வகை வேகமாகப் பரவுகின்றன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 364-ஆக அதிகரித்துள்ளது.
LF.7 மற்றும் NB.1.8.1 என்ற புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த வகை தொற்றால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. தேசிய அளவில் 5 ஆயிரத்து 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், 4 ஆயிரத்து 724 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக, கேரளாவில் ஆயிரத்து 679 பேர், குஜராத்தில் 615 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 2 பேர், கர்நாடகா, பஞ்சாபில் தலா ஒருவர் என 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்தனர்.
Delhi,Delhi,Delhi
June 06, 2025 1:09 PM IST


