Last Updated:
காயம் காரணமாக, அவர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பவுமா பங்கேற்கவில்லை. அந்தத் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கேப்டன் டெம்பா பவுமா அணிக்கு திரும்பியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்கவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
இரு அணிகளும் பங்கேற்கும் முதல் டெஸ்ட் நவம்பர் 14 முதல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 22 முதல் குவாஹாட்டியில் உள்ள ஏசிஏ ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
தென்னாப்பிரிக்க கேப்டனான டெம்பா பவுமா, கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட இடது கால் கன்று தசைப்பிடிப்பில் இருந்து முழுமையாகக் குணமடைந்து அணிக்குத் திரும்பியுள்ளார். காயம் காரணமாக, அவர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பவுமா பங்கேற்கவில்லை. அந்தத் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது
பவுமாவின் வருகையால் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசை பலப்படுத்தப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்களான ஐடன் மார்க்ரம், டோனி டி சோர்சி, டிவால்ட் பிரெவிஸ், ஜுபைர் ஹம்சா, மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கைல் வெர்ரைன் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தொடரில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர்கள் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், மற்றும் செனுரன் முத்துசாமி இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணி – டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ராம், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரேய்ன், டெவால்ட் ப்ரெவிஸ், ஜுபைர் ஹம்சா, டோனி டி சோர்ஜி, கார்பின் போஷ், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், செனுரன் முத்துசாமி, சிம்சோ ரபடா.
October 27, 2025 5:37 PM IST


