Last Updated:
இந்தியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிப்பதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்,
இந்தியாவிலும் சமூக ஊடகங்களை சிறார் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களால் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்தது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவிலும் சமூக வலைதளங்களை சிறார் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுடனும் கலந்து ஆலோசித்து வருவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். சமூக வலைதளங்களால் நாளுக்கு நாள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், அத்தகைய தீங்குகளில் இருந்து குழந்தைகள் மற்றும் சிறாரை காக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை.. – மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்


