Last Updated:
கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார்லிங்க் இந்தியாவில் அன்லிமிடெட் டேட்டா பிளான்களை வழங்க திட்டமிட்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த ஸ்டார்லிங் சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், முதலில் அதன் டிவைஸை ரூ.33,000 செலுத்தி வாங்க வேண்டியிருக்கும்.
கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார்லிங்க் இந்தியாவில் அன்லிமிடெட் டேட்டா பிளான்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
அறிக்கையின்படி, இந்த ஸ்டார்லிங்க் சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முதலில் அதன் டிவைஸை ரூ.33,000 செலுத்தி வாங்க வேண்டியிருக்கும் எனவும், மாதந்தோறும் ரூ.3,000க்கு அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையைப் பெற முடியும் என்று அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் ஸ்டார்லிங்கின் திட்டத்தின் விலை, வங்கதேசத்தில் உள்ளதைப் போலவே இருக்கும். அங்கு ஏற்கனவே சேட்டிலைட் இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு அமைச்சகத்திடமிருந்து உரிமம் பெற்ற பிறகு, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஸ்டார்லிங்க் இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது. இதற்கிடையில், இந்திய சந்தைக்கான விலையை நிறுவனம் இறுதி செய்துவிட்டதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த சேவையைப் பெறத் தேவையான செயற்கைக்கோள் டிஷ்-ஐ வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.33,000 செலுத்த வேண்டும். மேலும், மாதாந்திர அன்லிமிடெட் டேட்டா பிளானின் விலை ரூ.3,000 ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தனது அறிமுகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு டிவைஸை வாங்கும் போதும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத இலவச டிரையல் (trail) சேவையை ஸ்டார்லிங்க் வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஒரு மாத இலவச சோதனையானது, சப்ஸ்கிரிப்ஷன் கட்டணங்களைச் செலுத்துவதற்கு முன்பு, யூசர்கள் ஸ்டார்லிங்க் சேவையின் தரம் மற்றும் பயன்பாட்டை அனுபவிக்க முடியும். இந்தியாவில் ஸ்டார்லிங்கின் அறிமுகமானது, நாட்டின் டிஜிட்டல் கனெக்ட்டிவிட்டி சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஃபைபர்-ஆப்டிக் அல்லது மொபைல் அடிப்படையிலான இணைய சேவைகள் நம்பகத்தன்மையற்றதாகவோ அல்லது கிடைக்காததாகவோ இருக்கும் பகுதிகளில் பெரும் உதவியாக இருக்கும்.
லோ எர்த் ஆர்பிட்டில் உள்ள செயற்கைக்கோள்களின் தொகுப்பைப் பயன்படுத்துவதன் மூலம், இன்டர்நெட் சேவை இல்லாத இடங்களில் உள்ள யூசர்களுக்கு வேகமான மற்றும் நிலையான இன்டர்நெட் ஆக்சஸை ஸ்டார்லிங்க் வழங்குகிறது. ஸ்டார்லிங்க் தற்போது 25 முதல் 220 Mbps வரை அதிவேக இன்டர்நெட்டை வழங்கி வருகிறது. அதிலும் பெரும்பாலான யூசர்கள் 100 Mbpsக்கும் அதிகமாக இன்டர்நெட் ஸ்பீடைப் பெறுவதாகக் கூறுகிறார்கள். இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி ஆனது ஃபைபர் அல்லது மொபைல் நெட்வொர்க்குகளைச் சார்ந்து இல்லாமல், லோ எர்த் ஆர்பிட்டில் உள்ள செயற்கைக்கோள்களின் தொகுப்பின் மூலம் வழங்கப்படுகிறது. இது நம்பகமான, வேகமான இன்டர்நெட்டை மினிமல் லேடன்சியுடன் வழங்குகிறது.
தற்போது, ஸ்டார்லிங்க் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையைத் தொடங்கத் தயாராகி வருவதன் மூலம், நாட்டின் தொலைதூர மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இன்டர்நெட் வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, இந்தியாவில் இந்த சேவையை அறிமுகப்படுத்துவதை ஆதரிப்பதற்காக, ஸ்டார்லிங்க், தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மையானது தற்போதுள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும், ஒழுங்குமுறை வழிசெலுத்தலை எளிதாக்கவும் உதவுகின்றன.
June 12, 2025 7:54 AM IST


