• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிப்பது குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும் – அதிபர் டிரம்ப்

GenevaTimes by GenevaTimes
February 21, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிப்பது குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும் – அதிபர் டிரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 21, 2025 6:55 PM IST

அமெரிக்கா இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை உயர்த்த 182 கோடி ரூபாய் நிதி அளித்தது குறித்து அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். இதனால் அமெரிக்கா இந்த நிதி திட்டத்தை ரத்து செய்துள்ளது.

News18News18
News18

இந்தியாவில் வாக்குப்பதிவு அளவை அதிகரிக்கச் செய்வதற்காக அமெரிக்கா நிதி அளித்தது ’கிக்பேக் திட்டம்’ என அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் US AID திட்டத்தின் மூலம், 1951-ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகள் நிதி பெற்று வருகின்றன. எய்ட்ஸ் விழிப்புணர்வு, குழந்தைகளின் நலன், பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் USAID மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை உயர்த்த 182 கோடி ரூபாய் நிதி அளித்ததாகவும், இதனை உடனடியாக நிறுத்த உள்ளதாகவும் அமெரிக்க அரசின் திறன் துறைத் தலைவர் எலான் மஸ்க் அறிவித்திருந்தார். மஸ்க்கின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் யார் இந்த நிதியை பெறுகிறார்கள் என்று பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் காங்கிரஸ்- பாஜக இடையே பெரும் வார்த்தை போரும் மூண்டது.

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து விளக்கம் அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிடம் அதிக பணம் இருப்பதாக கூறியுள்ளார். இந்தியாவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் நிதியளிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். உலக அளவில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் விமர்சித்த டிரம்ப், பிரதமர் மோடி நல்ல நண்பர் தான் என்றாலும், அதற்காக நிதி எல்லாம் கொடுக்க முடியாது என்றும் டிரம்ப் காட்டமாக கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள் : FBI-யின் புதிய தலைவராக இந்திய வம்சாவளி தேர்வு.. நியமனத்துக்கு பின் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

இதனையடுத்து, இந்தியாவில் வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க 182 கோடி ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. இது குறித்து வாஷிங்டன்னில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் ஆளுநர்கள் சங்க கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிப்பது குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் பெற்ற நிதியை, இந்தியா அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பியதாகவும், பைடன் நிர்வாகத்தால் தன்னைத் தேர்ந்தெடுக்க விடாமல் செய்ய முயற்சி நடந்ததாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

First Published :

February 21, 2025 6:55 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிப்பது குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும் – அதிபர் டிரம்ப்

Read More

Previous Post

நீங்க 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய ஆதாரை இன்னும் வச்சிருக்கீங்களா..?

Next Post

நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக மனைவி புகார்- நடிகர் பாலா மீது மோசடி வழக்கு | Makkal Osai

Next Post
நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக மனைவி புகார்- நடிகர் பாலா மீது மோசடி வழக்கு | Makkal Osai

நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்ததாக மனைவி புகார்- நடிகர் பாலா மீது மோசடி வழக்கு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin