Last Updated:
2025ஆம் ஆண்டிற்கான Hurun Global Rich List for 2025 பட்டியல், கடந்த ஆண்டில் நாட்டின் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது.
இந்தியாவின் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 284ஆக உயர்ந்துள்ளது. இந்த 284 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.98 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டிற்கான Hurun Global Rich List for 2025 பட்டியல், கடந்த ஆண்டில் நாட்டின் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது.
அதேபோல மும்பையில் மட்டும் 90 பில்லியனர்கள் உள்ளனர். அதிக பில்லியனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா வலுவான இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஒவ்வொரு கோடீஸ்வரரின் சராசரி சொத்து மதிப்பிலும் சீனாவை நம் நாடு பின்தள்ளியுள்ளது என்பது சிறப்பு.
870 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. Hurun அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள 175 பில்லியனர்கள் தங்கள் சொத்து மதிப்பில் அதிகரிப்பைக் கண்டுள்ளனர். அதே நேரம் 109 பில்லியனர்கள் தங்கள் சொத்து மதிப்பில் சரிவை சந்தித்துள்ளனர் அல்லது அவர்களின் சொத்து மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
இந்திய கோடீஸ்வரரின் சராசரி சொத்து தற்போது ரூ.34,514 கோடியாக உள்ளது. கூடுதலாக, இந்தியாவில் 40 வயதிற்கு உட்பட்ட 7 பில்லியனர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெங்களூரு மற்றும் மும்பை நகரங்களைச் சேர்ந்தவர்கள். உலகளாவிய அளவில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் கடந்த ஆண்டில் 189 பில்லியன் டாலர்களைப் பெற்று, மிகப் பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்தார். இவர் கடந்த ஐந்தாண்டுகளில் நான்காவது முறையாக உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். 400 பில்லியன் டாலர்களைக் கடந்த முதல் தனிநபர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதையும் படிக்க: மது அருந்துவதை மறைத்தால் உங்கள் காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படலாம்; உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன…?
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 266 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கிடையே மெட்டாவின் AI மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் வலுவான முதலீட்டாளர் நம்பிக்கையால், மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் முதல்முறையாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். இந்த ஆண்டு ஹுருன் பட்டியலில் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து குறிப்பிடத்தக்க நபர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பாடகர்கள் ஜே-இசட், ரிஹானா, டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் பால் மெக்கார்ட்னி ஆகியோர் அடங்குவர்.
இதையும் படிக்க: மருத்துவக் கடன் vs தனி நபர் கடன்: உங்கள் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்கு எது சரியானது…?
மேலும், பில்லியனர் கிளப்பில் இடம் பிடித்த விளையாட்டு வீரர்களில் மைக்கேல் ஜோர்டான், டைகர் உட்ஸ், ஃபிலாய்ட் மேவெதர், லெப்ரான் ஜேம்ஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் அடங்குவர். உலகளாவிய தரவரிசையில் இடம்பெற்ற ஒரே இன்ஃப்ளூயன்ஸர் கிம் கர்தாஷியன் ஆவார்.
March 28, 2025 7:17 PM IST
இந்தியாவில் ரூ.98 லட்சம் கோடி சொத்து மதிப்புடைய 284 பில்லியனர்கள்…! Hurun பட்டியலில் வெளியான தகவல்…


