இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்களை விட உயர்ந்த படிப்பு படித்த இளைஞர்களே அதிகம் வேலையில்லாமல் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது. உண்மையிலேயே இதைப் பார்க்கும் போதி அதிர்ச்சியாகவே இருக்கிறது. இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இடையே வேலைவாய்பின்மை விகிதம் 29.1 சதவிகிமாக இருக்கிறது. அதே சமயம் எழுதப் படிக்க தெரியாதவர்களிடையே வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் வெறும் 3.4 சதவிகிதமே உள்ளது. அப்படியென்றால் இவர்களை விட மெத்தப்படித்தவர்களிடத்தில் வேலைவாய்பின்மை சதவிகிதம் ஒன்பது மடங்கு அதிகமாக உள்ளது என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
பள்ளி இறுதி வகுப்பை முடித்தவர்களிடையே வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 18.4 சதவிகிதமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக பத்தாவது அல்லது மேல்நிலை வகுப்பை முடித்தவர்களிடையே இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது, தொழிலாளர்களின் திறனுக்கும் இங்கு உருவாகும் வேலைவாய்ப்பிற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மேலும் இந்தியாவின் மோசமான பள்ளிக்கல்வி கட்டமைப்பு காலப்போக்கில் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கிறார். உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்திய இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது. வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாக நுழையும் படித்த இளைஞர்களுக்கு விவசாயம் அல்லாத பிற துறைகளில் போதுமான ஊதியத்தை தரக்கூடிய வேலைவாய்ப்பை உருவாக்க இந்திய பொருளாதாரத்தால் முடியவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
அதனால்தான் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாகவும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டும் செல்கிறது என இந்த அறிக்கை கூறுகிறது. சீனாவில் 16-24 வயதுள்ள இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 15.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுவே இந்தியாவை எடுத்துக்கொண்டால், 15-29 வயதினிரிடையே 2000-ம் ஆண்டில் 88.6 சதவிகிதமாக இருந்த வேலைவய்ப்பின்மை விகிதம் 2022-ம் ஆண்டில் 82.9 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க:
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சத்தமின்றி பணிநீக்கம்… டெல் நிறுவனத்தின் செயல்பாடு என்ன?
ஆனால் இந்தக் காலகட்டத்தில் படித்த இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் 54.2 சதவிகிதத்திலிருந்து 65.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதில் பெண்கள் தான் அதிக பாதிப்பை சந்திக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்களில் 76.7 சதவிகிதம் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை இது 62.2 சதவிகிதமாக உள்ளது. மேலும் கிராமப்புறங்களை விட நகரத்தில் தான் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதேப்போல் கிக் ஜாப் என அழைக்கப்படும் குறைவான ஊதியம் தரும் வேலைகளான கால் டாக்ஸி, உணவு டெலிவரி சேவைகள் அதிகரித்து வருவதையும் எச்சரித்துள்ளது சர்வதேச தொழிலாளர் அமைப்பு. ஊழியர்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பில் ஈடுபடும் தனிநபர்கள் இடையே உள்ள வித்தியாசத்தை தற்போதைய டிஜிட்டல் தளங்கள் அழித்துள்ளன. இதனால் பணியாளர்களின் பணிச்சூழல் மற்றும் ஆரோக்கியம் குறித்த சவால்கள் புதிதாக முளைத்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…